தமிழ்நாடு

பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத ஏற்றம்: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Published

on

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து உள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை 104 ரூபாயை தாண்டி விட்டது என்பதும் அதேபோல் டீசல் ஒரு லிட்டர் விலை 100 ரூபாயை தாண்டி விட்டது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உயர்வு காரணமாக இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 29 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் 105 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சென்னையில் டீசல் ஒரு லிட்டர் 33 காசுகள் உயர்ந்து உள்ளதை அடுத்து ரூபாய் ரூ.101.25 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் முதல் முறையாக பெட்ரோல் விலை 105 ரூபாயும் டீசல் விலை 101 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையாகி வருவதாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் மத்திய மாநில அரசுகள் உடனடியாக பெட்ரோல் டீசலுக்கான வரியைக் குறைக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version