தமிழ்நாடு

வரலாறு காணாத வகையில் உயர்ந்த டீசல் விலை: பெட்ரோல் விலையும் உயர்வு!

Published

on

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தினந்தோறும் உயர்ந்து கொண்டே வரும் நிலையில் சென்னையில் உள்பட தமிழகம் முழுவதும் பெட்ரோல் விலை கடந்த சில வாரங்களுக்கு முன்பு 100 ரூபாயை தாண்டி விட்டது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் சென்னையில் டீசல் விலை படிப்படியாக உயர்ந்து 100 ரூபாயை நெருங்கி வந்த நிலையில் முதல் முறையாக டீசல் விலை இன்று 100 ரூபாயைத் தாண்டிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அறிவித்து வரும் எண்ணெய் நிறுவனங்கள் இன்றும் அது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. சென்னையில் இன்று பெட்ரோல் விலை 30 காசுகள் உயர்ந்து உள்ளதை அடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 104.22 ரூபாய் என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சென்னையில் இன்று டீசல் விலை 33 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100.25 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே ஒரு சில மாவட்டங்களில் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி உள்ள நிலையில் தற்போது சென்னையில் முதல் முறையாக 100 ரூபாயை டீசல் விலை தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என்பதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஒரு சில அமைச்சர்களோ 95 சதவீத மக்கள் பெட்ரோல் மற்றும் டீசலை பயன்படுத்துவதில்லை என்றும் அதனால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் கூறிவருவது நகைப்புக்குரியதாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
seithichurul

Trending

Exit mobile version