தமிழ்நாடு

14 நாட்களில் 12 முறை உயர்ந்த பெட்ரோல் விலை: இன்று சென்னை விலை நிலவரம்!

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கிட்டத்தட்ட தினமும் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக சென்னையில் கடந்த 14 நாட்களில் 12 நாட்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 38 காசுகள் உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதனையடுத்து இன்று சென்னையில் பெட்ரோல் விலை விவரம் பின்வருமாறு:

இன்று சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ. 109.34
இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.99.42

சென்னையில் தொடர்ச்சியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருப்பதால் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 110 ரூபாயும் டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு 100 ரூபாயையும் நெருங்கி உள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version