தமிழ்நாடு

தினசரி 75 காசுகள் உயரும் பெட்ரோல், டீசல் விலை: இன்று எவ்வளவு?

Published

on

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினசரி சுமார் 75 காசுகள் உயர்ந்து வருவதை அடுத்து இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சர்வதேச சந்தையில் தற்போது கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்து கொண்டு வரும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை கடந்த 10 நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது. தினசரி சுமார் 75 காசுகள் வரை உயர்ந்து கொண்டு வருவதால் கடந்த 10 நாட்களில் சுமார் 8 ரூபாய் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்றும் சென்னையில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் பெட்ரோல் விலை ரூபாய் 110ஐயும், டீசல் விலை ரூபாய் 100ஐயும் நெருங்கியுள்ளதால் பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்த தகவலைப் பார்ப்போம்

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் உயர்ந்து உள்ளது. எனவே இன்று சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ. 108.96 என விற்பனையாகிறது.

சென்னையில் இன்று டீசல் விலை ஒரு லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து உள்ளது. இதனால் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.99.04 என விற்பனையாகிறது.

 

 

seithichurul

Trending

Exit mobile version