தமிழ்நாடு

முடிவே இல்லாமல் உயர்ந்து வரும் பெட்ரோல் விலை: இன்று ஒருநாளில் மட்டும் இவ்வளவா?

Published

on

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே வந்த நிலையில் இந்தியாவில் மூன்று மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருந்தது. ஆனால் தற்போது கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் சுமார் 75 காசுகள் உயர்ந்து வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன

இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்த தகவலைப் பார்ப்போம்

இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து உள்ளதால் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ. 107.45 என விற்பனையாகிறது.

இன்று டீசல் விலை ஒரு லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து உள்ளதால் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.97.52 என விற்பனையாகிறது.

 

 

seithichurul

Trending

Exit mobile version