தமிழ்நாடு

தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை: இன்று ஒரே நாளில் இவ்வளவு உயர்வா?

Published

on

கடந்த 8 நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சுமார் ஐந்து ரூபாய் உயர்ந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

5 மாநில தேர்தல் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்த போது பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் ஆனால் தேர்தலுக்குப் பின்னர் தற்போது தினமும் கிட்டத்தட்ட ஒரு ரூபாய் அளவிற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் உயர்ந்து உள்ளதால் சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ. 106.69 என விற்பனையாகிறது.

அதேபோல் இன்று டீசல் விலை ஒரு லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து உள்ளதால் சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.96.76 எனவும் விற்பனையாகிறது.

seithichurul

Trending

Exit mobile version