தமிழ்நாடு

மீண்டும் உயர்ந்தது பெட்ரோல் விலை: ரூ.107ஐ நெருங்கியதால் அதிர்ச்சி!

Published

on

கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் ஒவ்வொரு நாளும் 30 காசுகளுக்கும் மேல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதால் மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஒரு ரூபாய் என்ற அளவில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக பெட்ரோல் விலை 106 ரூபாயை தாண்டி விட்டது என்பதும் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி தொடர்ச்சியாக விலை உயர்ந்து கொண்டே இருப்பதால் பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டுமே ரூபாய் 110 என்ற அளவுக்கு இன்னும் ஒரு சில நாட்களில் நெருங்கி விடும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் இருந்து வந்தது.

இந்த நிலையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு காரணமாக இன்றும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஆனால் அதே நேரத்தில் டீசல் விலை உயர்வு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது சற்று ஆறுதல் அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று சென்னையில் பெட்ரோல் விலை 31 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 106.66 ரூபாய் என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் டீசல் விலை நேற்றைய விலை 102.59 ரூபாய் என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பெட்ரோல் விலை ஏறுமுகத்தில் இருப்பது வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version