தமிழ்நாடு

இன்று பெரியார் தினம்: தலைவர்கள் அஞ்சலி!

Published

on

இன்று தந்தை பெரியார் நினைவு தினத்தை அடுத்து அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

சமூக சீர்திருத்தவாதியாகவும் சாதி வேற்றுமையை அகற்றுவதற்காக பாடுபட்டவர்களில் ஒருவராகவும் மூட நம்பிக்கைகளிலிருந்து மக்களை விடுவிக்க போராடியவருமான தந்தை பெரியார் கடந்த 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறந்தார் என்பதும் அவர் 1973 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி தனது 94 வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

திராவிட கழகத்தை தோற்றுவித்தவர் என்ற பெருமை பெற்ற பெரியார், சுயமரியாதை, பகுத்தறிவு கொள்கையை கடைபிடித்து அதனை அனைவரிடமும் பரப்பி வந்தார். சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து குரல் கொடுத்தவர்.

கடவுள் நம்பிக்கை மற்றும் கடவுள் பெயரால் இருக்கும் மூட நம்பிக்கைகளை எதிர்த்தவர் பெரியார் என்பதும் தமிழ் சமூகத்திற்காக பல புரட்சிகரமான செயல்களைச் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போதைய அரசியல் தலைவர்களுக்கு எல்லாம் அரசியல் குருவாக இருந்து வருபவர் பெரியார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் அதன் பிறகு நீதிக் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றார். பின்னர் நீதிக்கட்சி என்ற பெயரை திராவிட கழகம் என்று மாற்றினார்.

இந்து மத மூட நம்பிக்கைகளை மக்களிடையே வளர்ப்பதாக கூறி பிள்ளையார் உருவ பொம்மைகளை உடைத்தும், இந்துக்களின் கடவுளாக கருதப்பட்ட ராமரின் உருவப்படத்தை எரிக்கும் போராட்டத்தை நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பகுத்தறிவு பகலவன், வைக்கம் வீரர், தந்தை பெரியார் என பெருமையுடன் அழைக்கப்படும் பெரியாரின் நினைவு நாளைளில் அனைவரும் அவரது கொள்கைகளை பின்பற்றுவோம் என்று உறுதி கூறுவோம்.

seithichurul

Trending

Exit mobile version