தமிழ்நாடு

ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்: மோடி, அமித்ஷாவை சந்திக்கின்றாரா?

Published

on

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இன்று இரவு திடீரென டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒற்றை தலைமை பிரச்சனை கடந்த சில நாட்களாக அதிமுகவில் நடந்து வரும் நிலையில் இன்று கூடிய பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்ற முடியவில்லை.

இருப்பினும் ஜூலை 11-ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட இருப்பதாகவும் இந்த கூட்டத்தின்போது எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அனுமதியின்றி பொதுக்குழுவை கூட்ட முடியாது என்பதே ஓபிஎஸ் தரப்பினரின் வாதமாக உள்ளது. இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் இன்று இரவு டெல்லி செல்ல இருப்பதாகவும் அவர் பிரதமர் மற்றும் அமித்ஷாவை சந்தித்து அதிமுகவில் உள்ள பிரச்சனை குறித்து பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஓபிஎஸ் அவர்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சற்றுமுன் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version