தமிழ்நாடு

இன்று மார்ச் 8: சர்வதேச மகளிர் தினம்!

Published

on

உலகம் முழுவதும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று அந்த மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல், சமூகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, தொழில் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண்கள் தற்போது முன்னேறி வரும் நிலையில் இந்த கொண்டாட்டம் மிகத் மிகப்பொருத்தமானதாக கருதப்படுகிறது.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்பது வெறும் பழமொழியாக மட்டுமில்லாமல் நேர்மறை எண்ணங்களை ஆண்கள் மனதில் விதைத்து சந்தோஷமான வாழ்க்கைக்கு தேவையான திட்டங்களை வகுப்பது பெண்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது

பல்வேறு துறைகளில் பெண்களுக்கே உரிய பல தடைகளை தாண்டி எதிர்நீச்சல் போட்டு பல பெண்கள் ஏராளமான சாதனைகள் படைத்து உள்ளார்கள் என்பதும் அவர்களுக்காகவே இந்த மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

விண்வெளி உலகில் சாதனை செய்த கல்பனா சாவ்லா, பாகிஸ்தானில் பெண் குழந்தைகளின் உரிமைகளுக்காக போராடிய மலாலா யூசுப், தற்போது அமெரிக்க துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ், இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி, உள்பட பல பெண்கள் உலக அளவில் சாதனை படைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

பெண்கள் என்றாலே அடிமைத்தனம் என்பதை உடைத்து தங்கள் ஆதிக்கத்தால் வேரூன்றி பெண்கள் தற்போது விழிப்புணர்வு அடைந்துள்ளனர். இன்னும் அவர்கள் ஆண்களை விட அதிகமான அதிகமான உயரத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி இந்த மகளிர் தினம் கொண்டாடப்பட வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் மார்ச் 8 ஆம் தேதி ஒரே ஒருநாள் மட்டும் மகளிர் தினம் கொண்டாடினால் போதாது என்றும் ஒவ்வொரு நாளும் பெண்களை போற்றி பாராட்ட வேண்டும் என்றும் அவ்வாறு பாராட்டுக்குரியவர்கள் தான் பெண்கள் என்பதும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version