இந்தியா

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்: மாணவர்கள் ஆர்வம்!

Published

on

மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய இன்று கடைசி தினம் என்பதால் இன்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என அரசியல்வாதிகள் மற்றும் சமூகநல ஆர்வலர்கள் குரல் கொடுத்து வந்த போதிலும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு காரணமாக நீட்தேர்வு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் நீட் தேர்வும் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேசிய தேர்வு கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவித்தது இதற்கான விண்ணப்பங்களை ஜூலை 13ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி நீட் தேர்வுக்கான விண்ணப்பம் செய்யும் தேதி முடிவடைகிறது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி நீட்தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய நாளை முதல் அதாவது ஆகஸ்ட் 11 முதல் 14 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய இன்றுதான் கடைசி தினம் என்பதால் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டுக்கு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நீட் தேர்வு நடைபெறும் நகரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

இதுவரை நாடு முழுவதும் 155 நகரங்களில் மட்டுமே நீட் தேர்வு நடைபெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு 198 மையங்கள் என அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் தேர்வு மையங்களின் எண்ணிக்கை இன்னும் உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version