தமிழ்நாடு

இன்றுடன் முடிவடைகிறது வேட்புமனு தாக்கல்: 4000 மனுக்கள் தாக்கலானதாக தகவல்!

Published

on

ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தமிழகம், புதுவை மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களிலும் இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது, இதனையடுத்து இன்று ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் சேர்த்து இதுவரை 4000 வேட்புமனுக்கள் தாக்கல் ஆகி உள்ளன. இதுகுறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியபோது, ‘தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இதுவரை 3997 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும், அவர்களில் 3332 பேர் ஆண்கள் என்றும் 664 பேர் பெண்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வேட்புமனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து நாளை வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 22ஆம் தேதி கடைசி நாள் ஆகும் என்பதும் அன்று மாலையே வேட்பாளர்கள் இறுதி பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று வேட்பு மனு தாக்கல் கடைசி தினம் என்பதால் அரசியல் கட்சி தலைவர்களும் சுயேட்சைகளும் ஏராளமான வேட்புமனு தாக்கல் செய்ய வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version