இந்தியா

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி: மாணவர்கள் ஆர்வம்

Published

on

2022 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் அவசர அவசரமாக விண்ணப்பித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் 2022ஆம் ஆண்டில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது .

இதுவரை 13 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்றும் ஒரே நாளில் மிக அதிகமான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜூலை 17ஆம் தேதி தமிழ் உள்பட 13 மொழிகளில் நேற்று நடைபெற உள்ளது என்பதும் இந்த தேர்வுக்காக மாணவர்கள் கடந்த சில வாரங்களாக தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் இன்று மாலைக்குள் விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

 

Trending

Exit mobile version