கிரிக்கெட்

ஐபிஎல் இறுதி போட்டி: சிஎஸ்கே மற்றும் கேகேஆர் கடந்து வந்த பாதைகள்!

Published

on

2021 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் இன்றைய போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணி இதுவரை மூன்று முறை சாம்பியன் பட்டம் பெற்று உள்ளது என்றும் அதேபோல் கொல்கத்தா அணி 2 முறை சாம்பியன் பட்டம் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னை அணி ஒன்பதாவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது என்பதும் கொல்கத்தா அணி 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாற்றம் கொல்கத்தா அணி கடந்த 2012ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் மோதின. அப்போது சென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களை குவித்த நிலையில் கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடி 19.4 ஓவர்களில் 192 ரன்கள் எடுத்து கோப்பையை கைப்பற்றியது.

இதுவரை 2 முறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள கொல்கத்தா அணி 2 முறையும் கோப்பையை வென்றுள்ளது என்பதும், இன்று மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் அந்த அணி கோப்பையை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரை பொறுத்தவரை சென்னை அணி தான் விளையாடிய 14 போட்டிகளில் 9 போட்டிகளில் வெற்றி பெற்று 5 போட்டிகளில் தோல்வியடைந்து 18 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தது. அதேபோல் கொல்கத்தா அணி 14 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றியும் 7 போட்டிகளில் தோல்வியடைந்து ரன்ரேட் அடிப்படையில் மும்பை அணியை பின்னுக்கு தள்ளிவிட்டு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

அதன் பின்னர் குவாலிஃபைடு சுற்றில் பெங்களூர் அணியுடன் மோதி வெற்றி பெற்ற கொல்கத்தா அணி, பிளே ஆப் சுற்றில் டெல்லி அணியை வெற்றி பெற்று தற்போது இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை அணியை பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரர்களாக டுப்லஸ்ஸிஸ் மற்றும் ருத்ராஜ் ஆகிய இருவரும் மிகச்சிறந்த பார்மில் உள்ளனர். அதே போல் மொயின் அலி, ஜடேஜா, அம்பத்தி ராயுடு, ஷர்துல் தாகூர், தோஇ ஆகியோர்களும் நல்ல பார்மில் உள்ளனர். பந்துவீச்சை பொறுத்தவரை தீபக் சஹர், ஹாசில்வுட், மொயின் அலி ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா அணியை பொறுத்தவரை வெங்கடேஷ் அய்யர், கில், தினேஷ் கார்த்திக், சுனில் நரேன், இயான் மோர்கன், ராகுல் திரிபாதி, வருண் சக்கரவர்த்தி ஆகியோர்கள் நல்ல பார்மில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் யாருக்கு வெற்றி கிடைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending

Exit mobile version