இந்தியா

இந்தியாவில் ஒன்றரை லட்சத்தை நெருங்கியது ஒருநாள் கொரோனா தொற்று!

Published

on

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,45,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தூள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 77,567 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும், கொரோனாவால் ஒரே நாளில் 794 பேர் உயிரிழப்பு என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தூள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,32,05,926 எனவும், அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 1,68,436 எனவும், குணமானோர் எண்ணிக்கை 1,19,90,859 எனவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தூள்ளது.

மேலும் இந்தியாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர்களின் எண்ணிக்கை 10,46,631 என்றும் இந்தியாவில் இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொண்டோர் எண்ணிக்கை 9,80,75,160 என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தூள்ளது.

இந்தியாவில் இரண்டாம் அலை காரணமாக கொரோனா பரவல் எண்ணிகை தினம் தினம் புதிய உச்சம் தொட்டு வருவதால் மத்திய , மாநில அரசுகள் மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Trending

Exit mobile version