தமிழ்நாடு

இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் முக்கிய தலைவர்கள்!

Published

on

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் வேட்புமனு தாக்கல் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது என்பது தெரிந்தது. ஆனால் அதே நேரத்தில் மார்ச் 13 மற்றும் 14 ஆகிய இரண்டு நாட்கள் சனி ஞாயிறு விடுமுறை என்பதால் வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை

இந்த நிலையில் இன்று முதல் மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள நிலையில் இன்று முக்கிய தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று எடப்பாடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். அதேபோல் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களும் இன்று கொளத்தூரில் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர்களும் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

வரும் 19ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று இருக்கும் நிலையில் இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட அனைவரும் விறுவிறுப்பாக வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். இன்று ஒரே நாளில் ஆயிரக்கணக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதால் தேர்தல் அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்

 

Trending

Exit mobile version