தமிழ்நாடு

சவரனுக்கு ரூ.240 இறங்கிய தங்கம் விலை: இன்றைய சென்னை விலை என்ன?

Published

on

சென்னையில் தங்கம் விலை நேற்று காலையில் குறைந்து, மாலையில் திடீரென உயர்ந்தது என்ற செய்தியைப் பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மீண்டும் விலை இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் 22 காரட் ஒரு கிராம் விலை ரூபாய் 4520.00 என்றும் ஒரு சவரன் விலை ரூபாய் 36160.00 என்றும் விற்பனையாகி வருகிறது. இதனால் நேற்றைய விலையை விட இன்றைய தங்கம் ஒரு கிராம் ரூ 30 ரூபாய் குறைந்துள்ளது.

அதேபோல் சென்னையில் 24 காரட் சுத்தத் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4880.00 என்றும் 8 கிராம் ரூபாய் 39040.00 என்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 24 காரட் தங்கம் விலை நேற்றைவிட இன்று கிராமுக்கு ரூ.20ம், சவரனுக்கு ரூ.160ம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 70 காசுகள் குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்று வெள்ளி ஒரு கிராம் ரூபாய் 73.40 என்ற விலையிலும், ஒரு கிலோ ரூபாய் 73400.00 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது.

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது என்பதால் தங்கம் விலை சென்னையிலும் ஏற்ற இறக்கத்துடன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று தங்கம் விலை குறைந்துள்ளதை அடுத்து பொதுமக்கள் தங்கம் வாங்க மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர் பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version