தமிழ்நாடு

தங்கம் விலை இன்று உயர்வு: சவரனுக்கு ரூ.256 அதிகரிப்பு!

Published

on

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து கொண்டே இருந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதை அடுத்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

உலகம் முழுவதும் தொழில்துறை தேக்கம் அடைந்ததை அடுத்து பாதுகாப்பான முதலீடு என தங்கத்தில் அனைவரும் முதலீடு செய்ததால் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே இருந்தது

ஆனால் சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டதை அடுத்து தங்கம் விலை படிப்படியாக குறைந்து வந்தது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை வெகுவாக குறைந்து கிராம் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 4000 ரூபாய் என விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்றைய தங்க நிலவரப்படி சென்னையில் தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ரூ.32 உயர்ந்து கிராம் ஒன்றுக்கு ரூ.4239 எனவும், சவரன் ஒன்றுக்கு ரூ.33912 எனவும் விற்பனையாகி வருகிறது. அதேபோல் 24 காரட் தங்கம் ஒரு கிராம் 4630 எனவும், 8 கிராம் 37040 எனவும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 71.70 என்பதும் ஒரு கிலோ வெள்ளியின் விலை 71,700 என்பதும் குறிப்பிடத்தக்கது

seithichurul

Trending

Exit mobile version