தமிழ்நாடு

சென்னையில் ரூ.80 உயர்ந்தது தங்கம் விலை: நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

Published

on

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூபாய் 80 உயர்ந்ததை அடுத்து நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

சர்வதேச அளவில் தங்கத்தின் விலைக்கேற்ப சென்னையிலும் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக கடந்த சில நாட்களாக இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 10ம், சவரன் ஒன்றுக்கு ரூபாய் 80ம் உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.

சென்னையில் நேற்று தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4510.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று 10 ரூபாய் உயர்ந்து கிராம் ஒன்றுக்கு ரூ.4520.00 என விற்பனையாகி வருகிறது.

அதே போல் சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை நேற்று ரூ.36080.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூபாய் 80 உயர்ந்து ரூ.36160.00 என விற்பனையாகி வருகிறது. இதேபோல் சென்னையில் 24 காரட் சுத்தத் தங்கம் கிராமுக்கு ஒரு ரூ.4884.00 எனவும் சவரன் ஒன்றுக்கு ரூ.39072.00 எனவும் விற்பனையாகி வருகிறது.

தங்கத்தின் விலையை வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்து உள்ளது என்பதும் வெள்ளி ஒரு கிராம் 10 காசுகள் இன்று உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிட தக்கது. இன்று சென்னையில் வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ.72.10 எனவும் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.72100.00 எனவும் விற்பனையாகி வருகிறது.

தங்கத்தின் விலை இன்னும் சில நாட்களுக்கு ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்றும் ஆனால் நீண்ட கால முதலீட்டிற்கு தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்றும் பொருளாதார நிபுணர்கள் மற்றும் நகைக் கடை வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version