தமிழ்நாடு
தீபாவளி தினத்தில் சரிந்தது தங்கம் விலை!
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்றைய தீபாவளி ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 22ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய் 176ம் குறைந்துள்ளது.
சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4469 என்று விற்பனை ஆகி இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 22 ரூபாய் குறைந்து ரூபாய் 4447 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 35752 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 176 குறைந்து ரூபாய் 35576 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4850 எனவும் ஒரு சவரன் ரூபாய் 38800 எனவும் விற்பனையாகி வருகிறது. 24 காரட் சுத்தத்தங்கம் இன்று ஒரு கிராம் ரூபாய் 26ம், ஒரு சவரன் ரூபாய் 208ம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் தங்கத்தின் விலை குறைந்தாலும் வெள்ளியின் விலை இன்று உயர்ந்துள்ளது. நேற்று வெள்ளியின் விலை ரூ. 67.60 என விற்பனையான நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூபாய் 67,70 என விற்பனையாகியுள்ளது. இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 67700 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.