தமிழ்நாடு

மீண்டும் 36 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை!

Published

on

தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருவது போலவே தங்கம் மற்றும் வெள்ளி விலையும் உயர்ந்து கொண்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக கடந்த வாரத்தில் இரண்டு நாட்கள் தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்து, ஒரு சவரன் 36 ஆயிரத்தை தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் குறித்த விபரங்களை பார்ப்போம்.

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4487.00 என்று விற்பனை ஆகி இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 28 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4515.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 35896.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 224 உயர்ந்து ரூபாய் 36120.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4879.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 39032.00 எனவும் விற்பனையாகி வருகிறது. ஆபரண தங்கம் போலவே சுத்த தங்கமும் ஒரு கிராம் ரூபாய் 28ம், ஒரு சவரன் ரூபாய் 224ம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தங்கத்தின் விலை போலவே வெள்ளியின் விலை இன்று உயர்ந்துள்ளது. நேற்று வெள்ளியின் விலை ரூ. 69.80 என விற்பனையான நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூபாய் 69.90 என விற்பனையாகியுள்ளது. இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 69900.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Trending

Exit mobile version