தமிழ்நாடு

சரிந்தது தங்கம்: இன்றைய விலை நிலவரம்

Published

on

தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக உச்சத்திற்கு சென்று வந்தது என்பதை பார்த்தோம். தங்கம் விலை ஏற்றத்தால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் இருந்த நிலையில் இன்று தங்கம் விலை சென்னையில் குறைந்து உள்ள தகவல் வெளிவந்துள்ளது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 9 ரூபாய் குறைந்து ரூபாய் 4566.00 என விற்பனையாகி வருகிறது. நேற்றைய விலை ஒரு கிராம் தங்கம் ரூபாய் 4575.00 என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சென்னையில் ஒரு சவரன் தங்கம் 72 ரூபாய் குறைந்து ரூபாய் 36528.00 என விற்பனையாகி வருகிறது என்பதும் நேற்றைய விலை ஒரு சவரன் ரூபாய் 36600.00 என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னையில் 24 காரட் சுத்தத் தங்கம் இன்றைய விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 4920.00 என்பதும் சவரன் ஒன்றுக்கு ரூபாய் 39360.00 என்பதும் குறிப்பிடத்தக்கது. 24 காரட் தங்கம் நேற்றைவிட கிராம் ஒன்றுக்கு ரூ.9 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று தங்கம் விலை குறைந்து இருந்தாலும் வெள்ளியின் விலை சற்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 74.50 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 74.70 என விற்பனையாகி வருகிறது. அதே போல் இன்று ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூபாய் 74700.00 என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப சென்னையிலும் தங்கம் விலை ஏற்ற இறக்கம் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version