தமிழ்நாடு

தொடர்ச்சியாக இறங்கி வரும் தங்கம் விலை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

Published

on

தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாக சரிந்து வந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் தங்கம் விலை இறங்கி உள்ளது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்.

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4484.00 என்று விற்பனை ஆகி இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 10 ரூபாய் குறைந்து ரூபாய் 4474.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 35872.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 80 குறைந்து ரூபாய் 35792.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4838.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 38704.00 எனவும் விற்பனையாகி வருகிறது. ஆபரண தங்கம் போலவே சுத்த தங்கமும் ஒரு கிராம் ரூபாய் 10ம், ஒரு சவரன் ரூபாய் 80ம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தங்கத்தின் விலை குறைந்தாலும் வெள்ளியின் விலை இன்று உயர்ந்துள்ளது. நேற்று வெள்ளியின் விலை ரூ. 68.60என விற்பனையான நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூபாய் 68.70 என விற்பனையாகியுள்ளது. இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 68700.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Trending

Exit mobile version