தமிழ்நாடு
மீண்டும் சரிந்தது தங்கம் விலை: சென்னையில் இன்றைய நிலவரம்!
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையை மாற்றத்திற்கு ஏற்ப சென்னையிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடந்த வாரம் ஒரே நாளில் ஏற்ற இறக்கத்துடனும், வெவ்வேறு நாள்களில் ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை இருந்த நிலையில் இன்று தங்கம் மீண்டும் விலை சரிந்துள்ளது.
இன்று இன்று தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.19 ரூபாய் சரிந்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சென்னையில் நேற்று தங்கத்தின் விலை ரூபாய் 4525.00 என எந்த நிலையில் இன்று 19 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் விலை ரூபாய் 4506.00 என விற்பனையாகி வருகிறது.
அதேபோல் சென்னையில் நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 36200.00 என விற்பனையாகி வந்த நிலையில் தற்போது 152 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூபாய் 36048.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சுத்தமான 24 காரட் தங்கம் விலை இன்று சென்னையில் ஒரு கிராம் 4866.00 என்றும் ஒரு சவரன் 338928.00 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தை போல வெள்ளியின் விலையும் இன்று சற்று குறைந்துள்ளது. நேற்றைய விலையை விட இன்று ஒரு கிராம் 20 காசுகள் குறைந்து உள்ளதை அடுத்து வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.73.90 எனவும் ஒரு கிலோ விலை 73900.00 ரூபாய் எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.