தமிழ்நாடு

இன்று ஒரே நாளில் மீண்டும் ரூ.200 உயர்ந்த தங்கம்!

Published

on

சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ200 உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம்.

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4413.00என்று விற்பனை ஆகி இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 25 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4438.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 35304.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 200 உயர்ந்து ரூபாய் 35504.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4802.00எனவும் ஒரு சவரன் ரூபாய் 38416.00எனவும் விற்பனையாகி வருகிறது. ஆபரண தங்கம் போலவே சுத்த தங்கமும் ஒரு கிராம் ரூபாய் 22ம், ஒரு சவரன் ரூபாய் 200ம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தங்கத்தின் விலை போலவே வெள்ளியின் விலை இன்று உயர்ந்துள்ளது. நேற்று வெள்ளியின் விலை ரூ. 65.20என விற்பனையான நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 70 காசுகள் உயர்ந்து ரூபாய் 65.90என விற்பனையாகியுள்ளது. இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 65900.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version