தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் போல் தினமும் உயரும் தங்கம் விலை: முடிவே இல்லையா?

Published

on

ஒரு பக்கம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் இன்னொரு பக்கம் மாதமொருமுறை சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்ந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். இதனால் ஏழை எளிய மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ள நிலையில் தங்கம் விலையும் இன்னொரு பக்கம் உயர்ந்து கொண்டே வருவதால் ஏழை எளியவர்களுக்கு தங்கம் இனி எட்டாக்கனியோ என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்றும் உயர்ந்து உள்ளதை அடுத்து இன்றைய விலை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்:

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4408.00 என்று விற்பனை ஆகி இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 5 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4413.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 35264.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 40 உயர்ந்து ரூபாய் 35304.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4777.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 38216.00 எனவும் விற்பனையாகி வருகிறது. ஆபரண தங்கம் போலவே சுத்த தங்கமும் ஒரு கிராம் ரூபாய் 5,. ஒரு சவரன் ரூபாய் 40,உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தங்கத்தின் விலை உயர்ந்தாலும் வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. நேற்று வெள்ளியின் விலை ரூ. 65.40 என விற்பனையான நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் குறைந்து ரூபாய் 65.20 என விற்பனையாகியுள்ளது. இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 65200.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version