வணிகம்

சென்னையில் இன்றைய தங்கம் விலையில் ஆச்சரியம்!

Published

on

கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஆச்சரியமாக நேற்றைய விலையிலேயே தங்கம் விற்பனை ஆகிறது என்பதும் எந்தவித விலைமாற்றமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்க விலை குறித்து தற்போது பார்ப்போம்

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4683.00 என்று விற்பனை ஆகி இந்த நிலையில் இன்றும் அதே விலையில் விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 37464.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்றும் அதே விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5082.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 40656.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் தங்கத்தின் விலையில் மாற்றமில்லை என்றாலும் வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. நேற்று வெள்ளியின் விலை ரூ. 65.30 என விற்பனையான நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 10 காசுகள் குறைந்து ரூபாய் 65.20என விற்பனையாகியுள்ளது. இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 65200.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Trending

Exit mobile version