தமிழ்நாடு

ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை: இன்றைய நிலை என்ன?

Published

on

கடந்த ஒரு வாரமாக தினமும் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் உயர்வதும் அதன் பின் அடுத்த நாளே 20 ரூபாய் சரிவதுமான நிலை இருந்து வருகிறது இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை நேற்றைய விலையிலிருந்து 20 ரூபாய் சரிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4765.00என்று விற்பனை ஆகி இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 20 ரூபாய் குறைந்து ரூபாய் 4745.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 38120.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 160 குறைந்து ரூபாய் 37960.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4949.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41152.00 எனவும் விற்பனையாகி வருகிறது. ஆபரண தங்கம் போலவே சுத்த தங்கமும் ஒரு கிராம் ரூபாய் 20ம், ஒரு சவரன் ரூபாய் 160ம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தங்கத்தின் விலை சரிந்தாலும் வெள்ளியின் விலையில் இன்று மாற்றமில்லை. நேற்று வெள்ளியின் விலை ரூ. 66.00 என விற்பனையான நிலையில் இன்றும் அதே விலையில் விற்பனையாகியுள்ளது. இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 66000.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version