வணிகம்

சென்னை தங்கம் விலையில் இன்று ஒரு ஆச்சரியம்: என்ன தெரியுமா?

Published

on

தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம், வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இன்று நேற்றைய விலையிலேயே விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தைப் பார்ப்போம்

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4835.00என்று விற்பனை ஆகி இந்த நிலையில் இன்றும் அதே விலையில் விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 38680.00என விற்பனையாகி வந்த நிலையில் இன்றும் அதே விலையில் விற்பனையாகி வருகிறது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5234.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41872.00 எனவும் விற்பனையாகி வருகிறது. ஆபரண தங்கம் போலவே சுத்த தங்கத்தின் விலையிலும் இன்று மாற்றம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தங்கத்தின் விலையில் மாற்றமில்லை என்றாலும் வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. நேற்று வெள்ளியின் விலை ரூ. 67.50 என விற்பனையான நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் குறைந்து ரூபாய் 67.30 என விற்பனையாகியுள்ளது. இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 67300.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version