வணிகம்

நீண்ட நாட்களுக்கு பின் 38 ஆயிரத்திற்கும் குறைந்தது தங்கம் விலை: இன்னும் குறையும் என தகவல்

Published

on

கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து வரும் நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் 40 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த ஒரு சவரன் தங்கம் தற்போது 38 ஆயிரத்துக்கும் குறைந்துள்ளது. இன்னும் சில வாரங்களில் தங்கம் விலை மேலும் குறையும் என்பதால் அவசிய தேவை இருந்தால் மட்டுமே தங்கம் வாங்கலாம் என்றும் அல்லது தங்கம் விலை குறைந்தவுடன் பொறுமை காத்து வாங்கலாம் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நேற்றும் இன்றும் தங்கம் விலை குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4755.00 என்று விற்பனை ஆகி இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 18 ரூபாய் குறைந்து ரூபாய் 4737.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 38040.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 144 குறைந்து ரூபாய் 37896.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5136.00எனவும் ஒரு சவரன் ரூபாய் 41088.00 எனவும் விற்பனையாகி வருகிறது. ஆபரண தங்கம் போலவே சுத்த தங்கமும் ஒரு கிராம் ரூபாய் 18ம், ஒரு சவரன் ரூபாய் 144ம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தங்கத்தின் விலை குறைந்தாலும் வெள்ளியின் விலை இன்று உயர்ந்துள்ளது. நேற்று வெள்ளியின் விலை ரூ. 63.20 என விற்பனையான நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூபாய் 63.70 என விற்பனையாகியுள்ளது. இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 63700.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version