தமிழ்நாடு

மீண்டும் எகிறிய தங்கம் விலை: சென்னையில் இன்றைய நிலவரம்!

Published

on

சென்னையில் தங்கம் விலை 3 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் நேற்று தங்கம் விலை குறைந்தது ஆனால் இன்று மீண்டும் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 15 ரூபாயும் சவரன் ஒன்றுக்கு 144 ரூபாய் உயர்ந்துள்ளது தங்க நகை பிரியர்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4368.00 என்று விற்பனை ஆகி இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 18 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4386.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 34944.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 144 உயர்ந்து ரூபாய் 35088.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4750.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 38000.00 எனவும் விற்பனையாகி வருகிறது. ஆபரண தங்கம் போலவே சுத்த தங்கமும் ஒரு கிராம் ரூபாய் 18ம், ஒரு சவரன் ரூபாய் 144ம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. நேற்று வெள்ளியின் விலை ரூ.67.50 என விற்பனையான நிலையில் இன்றும் அதே விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பதும், இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 67500.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version