தமிழ்நாடு

2022ஆம் ஆண்டின் முதல் முழு ஊரடங்கு: மக்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

Published

on

2022ஆம் ஆண்டு பிறந்து ஒரு வாரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் அதற்குள் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகியவற்றை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதும் இன்னும் இந்த ஆண்டில் என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய நிலை வரும் என்று அச்சமாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த ஆண்டின் முதல் முழு ஊரடங்கு இன்று அமலுக்கு வந்துள்ளது. எனவே இன்று பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்து தமிழக அரசு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

* அத்தியாவசிய தேவை இன்றி இன்று முழுவதும் பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது.

* ஆம்புலன்ஸ் சேவைகள் பால் மருத்துவமனை உள்ளிட்டவைகள் மட்டுமே இயங்க அனுமதி.

* அவசர சிகிச்சை மற்றும் தவிர்க்க முடியாத தேவைகளுக்கு பொதுமக்கள் வெளியே செல்ல அனுமதி.

* மருத்துவர்கள் வருவாய்த்துறையினர் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்து வெளியே வந்து கொள்ளலாம்.

* நோய் கட்டுப்பாட்டு பகுதியில் மருத்துவ அவசர தேவைகள் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதற்கு அனுமதி.

* உணவகங்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதி.

* மத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகள் நேர்முகத் தேர்வுகளில் பங்கு கொள்ள அனுமதி.

இவ்வாறு தமிழக அரசு கட்டுப்பாட்டு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version