தமிழ்நாடு

தமிழக வரலாற்றில் முதல்முறையாக வேளாண் பட்ஜெட்: இன்று தாக்கல்!

Published

on

தமிழக சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக நேற்று சட்டமன்றத்தில் இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது என்பதும் காகிதமில்லா இந்த இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு உறுப்பினர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடதக்கது.

நேற்று தாக்கல் செய்த இ-பட்ஜெட்டின்போது ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் முன்பாக ஒரு டேப் வைக்கப்பட்டு இருந்தது என்பதும் பட்ஜெட் உரை வாசிக்கும் போது அதில் புத்தக வடிவில் பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் அனைத்தும் திரையில் தோன்றியது என்பதும் இதனால் உறுப்பினர்கள் மிக எளிதாக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களை தெரிந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழக வரலாற்றில் முதல் முறையாக இ-பட்ஜெட்டை தாக்கல் செய்து சாதனை செய்த திமுக அரசு தற்போது தமிழக சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. இன்று சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.

தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு வேளாண்மை துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில்,. கரும்பு அறுவடையில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வது குறித்து அம்சங்கள் இந்த வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல் கரும்பு விவசாயிகள் நிலுவை தொகை ரூபாய் 1500 கோடி பிரச்சனைக்கு இன்றைய வேளாண் பட்ஜெட்டில் தீர்வு காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதாரத்தில் விவசாயிகள் தன்னிறைவு அடையும் வகையில் இந்த வேளாண் பட்ஜெட்டில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இன்றைய வேளாண் பட்ஜெட்டில் என்னென்ன சிறப்பு அம்சங்கள் இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.a

seithichurul

Trending

Exit mobile version