தமிழ்நாடு

ஸ்டாலின் ஆட்சியில் முதல் பட்ஜெட்: இன்று தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர்!

Published

on

தமிழக முதல்வராக முதல் முறையாக பதவியேற்றுள்ள முக ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் முதல் பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று காலை 10 மணிக்கு 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதல்முறையாக இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்பதும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் முன்பும் ஒரு டேப் வைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த டேப்பில் தமிழக பட்ஜெட்டில் முழுவிவரங்கள் புத்தக வடிவில் குறிப்பிடப்பட்ட இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் முதல் பட்ஜெட் என்பதால் இன்றைய பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி, குடும்பத்தலைவி ஆயிரம் ரூபாய் உள்பட ஒரு சில திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் தமிழக அரசின் வருமானத்தை பெருக்க கூடுதல் வரிகள் குறித்த அறிவிப்பும் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று பொது பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நாளை வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய பட்ஜெட்டில் என்னென்ன சிறப்பம்சங்கள், என்னென்ன புதிய திட்டங்கள், கூடுதல் வரி ஆகியவை குறித்து இன்னும் சற்று நேரத்தில் பார்ப்போம்.

Trending

Exit mobile version