தமிழ்நாடு

இன்னும் சில நிமிடங்களில் திமுக தேர்தல் அறிக்கை: அண்ணா, கருணாநிதி சமாதியில் மரியாதை

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக, அதிமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யும் பணிகளை முடித்த திமுக தலைவர் ஸ்டாலின், நேற்று திமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து இன்று அவர் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளார். இன்னும் சில நிமிடங்களில் அண்ணா அறிவாலயத்தில் அவர் தேர்தல் அறிக்கையை வெளியிட இருக்கும் நிலையில், அதற்கு முன்பாக அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

தேர்தல் அறிக்கையை கருணாநிதி நினைவிடத்தில் வைத்து ஸ்டாலின் மரியாதை செலுத்திய புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. திமுக தலைவர் ஸ்டாலின் உடன், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், டிஆர் பாலு உள்ளிட்டோர்களும் கருணாநிதி நினைவிடம் சென்றனர்.

இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் திமுக தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை திமுகவின் தேர்தல் அறிக்கையில் பல்வேறு அதிரடி திட்டங்களும் கவர்ச்சிகரமான இலவச அறிவிப்புகளும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version