தமிழ்நாடு

திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு: 173 தொகுதி வேட்பாளர்கள் யார் யார்?

Published

on

வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் கடந்த சில நாட்களாக இரு தரப்பும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தன.

இந்த நிலையில் தற்போது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கும் பணியை முழுமையாக முடித்துள்ள நிலையில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. ஏற்கனவே அதிமுக தரப்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் இன்று நண்பகல் 12 மணிக்கு திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடுகிறார். அதில் முக ஸ்டாலின், துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக அதிக இடங்களில் நேருக்கு நேர் மோதும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த தேர்தல் பரபரப்பின் உச்சத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் திமுகவில் இளைஞர்களுக்கும் புதியவர்களுக்கும் இந்த முறை அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று அக்கட்சியின் வட்டாரங்கள் கூறியுள்ளன.

seithichurul

Trending

Exit mobile version