தமிழ்நாடு

1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது எப்போது? இன்று அறிவிப்பு வெளிவர வாய்ப்பு என தகவல்!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் படிப்படியாக தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன என்பதும், குறிப்பாக ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் செப்டம்பர் மாதத்திற்கான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடையும் நிலையில் இன்று ஊரடங்கு நீடிப்பது மற்றும் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை செய்யவுள்ளார். இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள், மூத்த அமைச்சர்கள் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆலோசனையின் போது அக்டோபர் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிப்பது மற்றும் வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களை திறப்பது, ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவது ஆகியவையும் கவனத்தில் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பொது முடக்கத்தில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்தும் கட்டுப்பாடுகளை நீடிப்பது குறித்து சுகாதாரத்துறை நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் என்று ஆலோசனை செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் எண்ணிக்கை 1500 முதல் 1800 வரை இருப்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தமிழகத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்றும், அந்த அறிவிப்பில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவது குறித்த தகவல் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version