தமிழ்நாடு

தமிழக அரசின் வரி குறைப்புக்கு பின் சென்னையில் பெட்ரோல் விலை என்ன?

Published

on

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் நேற்று சட்டமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பதும் இந்த பட்ஜெட்டில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியானது என்பதையும் பார்த்தோம்.

குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு கடந்த பல மாதங்களாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் தேர்தலின்போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

அந்த அறிவிப்பின்படி நேற்றைய பட்ஜெட்டில் பெட்ரோல் மீதான தமிழக அரசின் வரி ரூபாய் மூன்று குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை மாற்றம் ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சென்னையில் தமிழக அரசின் வரி குறைப்புக்கு பின் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

இதன்படி சென்னையில் இன்று பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 99.47 ரூபாய் என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று வரை பெட்ரோல் விலை 102.47 ரூபாய் என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தமிழக அரசின் வரி குறைப்பு காரணமாக தற்போது நீண்ட நாட்களுக்குப் பின்னர் மீண்டும் 100 ரூபாய்க்குள் பெட்ரோல் விலை விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக அரசு அமைக்கப்பட்டு 100 நாட்களே ஆகியுள்ள நிலையில் பெட்ரோல் மீதான வரியை தன்னுடைய தேர்தல் வாக்குறுதியின்படி குறைத்துள்ளதை அடுத்து வாகன ஓட்டிகள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும் டீசல் மீதான வரி குறைப்பு குறித்த அறிவிப்பு தமிழக பட்ஜெட்டில் இல்லை என்பதால் டீசல் விலை 94.39 ரூபாய் என்ற விலையில்தான் சென்னையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version