தமிழ்நாடு

நம்ம ஊரு சிங்கார சென்னை: இன்று 382வது தின கொண்டாட்டம்!

Published

on

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் போல் வந்தாரை வாழவைக்கும் சென்னை என்று கூறினாலும் அது மிகையாகாது. தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து சென்னைக்கு வந்தவர்கள் திரும்பி சென்றது இல்லை என்பதுதான் சரித்திரம்.

அந்த வகையில் பெருமைக்குரிய நமது சிங்காரச் சென்னை இன்று 382 ஆவது தினத்தை கொண்டாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தாமல் வெங்கடப்பா நாயக்கர் என்பவரிடமிருந்து கிழக்கிந்திய கம்பெனி ஆகஸ்ட் 22ஆம் தேதி சிறிதளவு நிலத்தை வாங்கி உருவாக்கியதுதான் சென்னை நகரம். அதனை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுகிறது.

சென்னை மிகவும் பழமையான பெருமை வாய்ந்த நகரம் என்பதும் விரிந்து பரந்த வங்காளவிரிகுடாவில் ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரை மெரினா கடற்கரை மக்களுக்கு ஒரு பொழுதுபோக்கு மையமாக இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சென்னையில் உள்ள ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் மாளிகை, நேப்பியர் பாலம், மெட்ராஸ் போர் கல்லறை, அரசு அருங்காட்சியகம், சாந்தோம் சர்ச் ஆகியவை சென்னையின் பழமையை நினைவு கூறும் சின்னங்களாகும். சென்னையிலுள்ள கன்னிமாரா நூலகம், கிறிஸ்தவக் கல்லூரியின் நூற்றாண்டு நூலகம் ஆகியவை மிகவும் பழமை வாய்ந்தவை. அதேபோல் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் தொடங்கப்பட்ட அண்ணா நூலகம் சென்னை மக்களின் அறிவு பசியை போக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை நகரம் 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இயங்கும் ஒரு நகரம் என்பதும் இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி பேருந்து, ரயில் மற்றும் விமான போக்குவரத்து ஆகிய வசதிகள் உள்ள நகரம் என்பதால் ஒரு சென்னையில் இருந்து உலகின் எந்த ஒரு பகுதிக்கும் மிக எளிதில் சென்றடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் உணவுக்கு பஞ்சம் இல்லை என்ற வகையில் அம்மா உணவகம், கையேந்திபவன் முதல் 5 நட்சத்திர விடுதிகள் வரை பொதுமக்களின் பசியைப் போக்க செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அனைத்து முன்னணி உணவு டெலிவரி நிறுவனங்களும் அதிகம் உள்ள நகரம் சென்னை தான்.

சென்னையில் கடந்த சில வருடங்களாக அடிப்படை கட்டமைப்பு பெருகிக் கொண்டே வந்தாலும் சென்னை நகரம் தனது பழைமையான அடையாளத்தை இழக்காமல் சிறப்புடன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அனைத்து வகைகளிலும் சிறப்பாக இருக்கும் சென்னை நகரம் இன்று 382 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் சென்னை மக்கள் அனைவரும் கொண்டாடி வருவது பெருமைப்படக் கூடிய ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை நகரின் அழகையும் தூய்மையையும் பாதுகாக்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் அதில் சென்னைவாசிகளின் ஒத்துழைப்பும் கடமையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version