தமிழ்நாடு

இன்றும் நாளையும் எத்தனை மணி வரை கடை திறக்கலாம்?

Published

on

தமிழகத்தில் கோரனோ வைரஸ் பரவல் காரணமாக மே 10ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றும் நாளையும் கடைகள் எத்தனை மணி வரை திறந்து இருக்கலாம் என்ற தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இன்றும் நாளையும் இரவு 9 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என்றும் மக்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஊரடங்கு காலத்திலும் காய்கறிகள், மளிகை கடைகள், இறைச்சி கடைகள் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும் என்றும் 50 சதவீத வாடிக்கையாளர்கள் கடையில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள காலத்தில் அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், கார்கள் ஆட்டோக்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களுக்கு செல்பவர்கள் மட்டும் தங்களுடைய டிக்கெட்டை காண்பித்து பயணம் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version