தமிழ்நாடு

கோவையில் இன்றும் நாளையும் புதிய கட்டுப்பாடுகள்!

Published

on

சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தது என்பதை பார்த்து வருகிறோம். கடந்த மே மாதம் 35 ஆயிரத்துக்கும் மேல் இருந்த பாதிப்பு நேற்று 1500 என குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு இருந்த கொரோனா பாதிப்பை விட தற்போது படிப்படியாக அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சென்னை, கோவை ஆகிய பகுதிகளில் கொரோனா அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கோவையில் கொரோனாவை கட்டுப்படுத்த சனி ஞாயிறுகளில் போடப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருவதாக கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் கோவை மாநகராட்சிக்குட்பட்ட 36 இடங்களில் உள்ள அத்தியாவசியமான கடைகள் தவிர பிற கடைகள் திறக்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கோவை மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள நகைக்கடை, துணிக்கடை திறக்க தடை போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோவையில் உள்ள பூங்காக்கள், மால்கள் போன்ற பொழுதுபோக்கு இடங்களும் வார இறுதி நாட்களான சனி ஞாயிறு கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவையில் சனி, ஞாயிறு போடப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை கோவை பொதுமக்கள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version