தமிழ்நாடு

இன்றும் நாளையும் மெரீனாவில் அனுமதி இல்லை: தமிழக அரசு அறிவிப்பு!

Published

on

இன்றும் நாளையும் சென்னை மெரினா உள்பட சென்னையில் உள்ள அனைத்து கடற்கரையிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று தெலுங்கு வருடப்பிறப்பு விடுமுறை நாள் என்பதும் நாளை தமிழ் புத்தாண்டு தின விடுமுறை என்பதும் தெரிந்ததே. இதனால் இந்த இரண்டு நாட்களிலும் சென்னை மெரினா உள்பட பல கடற்கரைகளில் பொது மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஒரே இடத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கூடினால் கொரோனா தொற்றின் பரவல் அதிகமாகும் ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்தனர்.

இதனை அடுத்து தமிழக அரசு சற்று முன் சென்னை மெரீனா கடற்கரை உள்பட சென்னையில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு இன்றும் நாளையும் அனுமதி இல்லை என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் விடுமுறையை கடற்கரையில் கழிக்கலாம் என்று திட்டமிட்டிருந்த பொதுமக்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தினமும் 2,000 பேருக்கு மேல் புதிதாக சென்னையில் பரவி வரும் நிலையில் இப்படி ஒரு நடவடிக்கை அவசியமானது என்று ஒரு சிலர் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version