தமிழ்நாடு

3வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: செஞ்சுரி அடிப்பது எப்போது?

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒரு பக்கம் பொதுமக்கள் வேலை இழந்து, வாழ்வாதாரம் இன்றி இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் பெட்ரோல் டீசல் விலை தினமும் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

5 மாநில தேர்தல் காரணமாக கடந்த 2 மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருந்த நிலையில் தற்போது ஐந்து மாநில தேர்தல் முடிந்து, முடிவுகள் வெளியாகி புதிய அரசுகளும் பொறுப்பேற்று வருகின்றன.

இந்த நிலையில் கடந்த 4-ஆம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயரத் தொடங்கிய நிலையில் நேற்றும் உயர்ந்து தற்போது இன்றும் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 92.70 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 86.09 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று பெட்ரோல் விலை 20 காசுகள் உயர்ந்து லிட்டர் 92.90 ரூபாய்க்கும், டீசல் விலை 26 காசுகள் உயர்ந்து லிட்டர் 86.35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று அதிகாலை முதல் அமலுக்கு வந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தேர்தல் முடியும் வரை பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தாமல் திடீரென தற்போது பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திக் கொண்டே வருவதைப் பார்க்கும் போது வெகு விரைவில் பெட்ரோல் விலை செஞ்சுரி அடித்து விடும் என்ற அச்சமே பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுமக்கள் வேலை இழந்து வருவதால் பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பெட்ரோல் டீசலுக்கான வரியை மத்திய மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகின்றன. இருப்பினும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படுவதாக மத்திய அரசு வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளன.

seithichurul

Trending

Exit mobile version