தமிழ்நாடு

ரூ.101ஐ நெருங்கியது பெட்ரோல் விலை: ரூ.96ஐ கடந்தது டீசல்!

Published

on

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்றத்திற்கு ஏற்ப சென்னை உள்பட இந்தியா முழுவதும் உள்ள நகரங்களிலும் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கடந்த சில நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்திருந்த நிலையில்ம் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று சென்னையில் பெட்ரோல் விலை 26 காசுகள் அதிகரித்து உள்ளது. இதனை அடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 100.75 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இன்று டீசல் விலை மிக அதிகமாக முப்பத்தி மூன்று காசுகள் அதிகரித்துள்ளதை அடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 96.26 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் விலை ஒரு லிட்டம் 101 ரூபாயை நெருங்கியுள்ளதும் டீசல் விலை 96 ரூபாயை தாண்டியுள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ள நிலையில் தற்போது பெட்ரோல் டீசல் விலையும் உயர்ந்து வருவது ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version