தமிழ்நாடு

தங்கம் விலை இன்று ஒரே நாளில் 144 உயர்வு: நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

Published

on

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலைக்கு ஏற்ப சென்னையிலும் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 444 உயர்ந்துள்ளது நகை பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4502.00 என்று விற்பனை ஆகி இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 18 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4520.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 36016.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 144 உயர்ந்து ரூபாய் 36160.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4884.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 39072.00 எனவும் விற்பனையாகி வருகிறது. ஆபரண தங்கம் போலவே சுத்த தங்கமும் ஒரு கிராம் ரூபாய் 16ம், ஒரு சவரன் ரூபாய் 144ம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தங்கத்தின் விலை உயர்ந்தாலும் வெள்ளியின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. நேற்று வெள்ளியின் விலை ரூ.71.90 என விற்பனையான நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் குறைந்து ரூபாய் 71.40 என விற்பனையாகியுள்ளது. இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 71400.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version