தமிழ்நாடு

திருப்பி அனுப்பப்படும் என்று தெரிந்தும் இன்று இயற்றப்படும் நீட் தேர்வு தீர்மானம்!

Published

on

நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் இயற்றப்பட்ட இருக்கும் நிலையில் இந்த தீர்மானம் குடியரசுத் தலைவரால் திருப்பி அனுப்பப்படும் என்று தெரிந்தும் இயற்றப்பட உள்ளதாக நெட்டிசன்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவிலேயே நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரே மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது என்பது தெரிந்ததே. தமிழக அரசியல் தலைவர்கள் குறிப்பாக திமுக தலைவர்கள் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அனைத்து முயற்சிகளையும் எடுப்போம் என்று தேர்தலுக்கு முன்னரும் தேர்தலுக்கு பின்னரும் தெரிவித்து வருகின்றனர்.

நீட் தேர்வின் பாதிப்பு குறித்து அறிய ஏகே ராஜன் என்பவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அந்த குழுவிடம் இருந்து பெற்ற அறிக்கையின் அடிப்படையில் இன்று சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட உள்ளது. இந்த தீர்மானம் முறையாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அந்தத் தீர்மானத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொள்வாரா அல்லது திருப்பி அனுப்புவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

பொதுவாக நாடு முழுவதும் அமலில் உள்ள ஒரு சட்டத்தை எதிர்த்து தீர்மானம் இயற்ற வேண்டுமானால் குறைந்தது இரண்டு மாநிலங்கள் சட்டசபையில் தீர்மானம் இயற்றி அந்த தீர்மானங்களை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்போதுதான் குடியரசு தலைவர் அதனை பரிசீலனை செய்வார். ஒரே ஒரு மாநிலம் மட்டும் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் இயற்றினால் அந்த தீர்மானம் திருப்பி அனுப்பப்படும்.

ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதலமைச்சராக இருக்கும்போது இதேபோன்று தீர்மானம் அனுப்பப்பட்டு அந்த தீர்மானம் திரும்பி வந்தது என்பதும் தெரிந்ததே. எனவே இன்று தாக்கல் செய்யப்படும் தீர்மானமும் குடியரசுத் தலைவரால் திருப்பி அனுப்பப்படும் என்று தெரிந்தும் திமுக அரசு இந்த தீர்மானத்தை இயற்ற உள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version