தமிழ்நாடு

இன்று 15 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: அதிரடி அறிவிப்பு!

Published

on

வங்கக் கடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று இரண்டாவது சனிக்கிழமை ஆக இருந்த போதிலும் ஏற்கனவே அதிகமாக விடப்பட்டிருந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் இன்று பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் மாண்டஸ் புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் இன்று விடுமுறை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் விடுமுறை அளிக்கப் பட்ட மாவட்டங்கள் பின்வருமாறு: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், கடலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர்.

மேற்கண்ட மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், ஆனால் அதே நேரத்தில் வரும் திங்கட் கிழமை முதல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் புயல் கடந்துள்ள நிலையில் ஏராளமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், சேதங்களை மீட்பு பணிகள் சரி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் மட்டும் சுமார் 65 மரங்கள் வேரோடு விழுந்ததாகவும் அந்த மரங்களை மாநகராட்சி ஊழியர்கள் விடியவிடிய அகற்றியதாகவும் தற்போது சென்னை இயல்பு நிலை திரும்பி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சென்னை ஈசிஆர் பகுதியில் நேற்றிரவு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை 6 மணி முதல் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version