இந்தியா

இந்தியாவில் 3வது அலையை தடுக்க ஒரு நாளைக்கு 87 லட்சம் தடுப்பூசிகள் அவசியம்; ஆனால் கிடைப்பதோ…

Published

on

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் மூன்றாவது அலை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடக் கூடாது என்று அனைத்து தரப்பு மக்களும் கருதி வருகிறார்கள். அதே நேரத்தில் கொரோனா தொற்றைத் தடுப்பதற்கு ஒற்றை ஆயுதமாக இருந்து வருவது தடுப்பூசி தான்.

இந்த தடுப்பூசி போதுமான அளவுக்கு கிடைத்து, அதை தகுதி படைத்த மக்களுக்கு விரைந்து செலுத்துவதன் மூலம் மட்டும் தான் கொரோனா தொற்றின் 3வது அலையைத் தடுக்க முடியும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்தியாவில் மொத்தம் இருக்கும் சுமார் 130 கோடி மக்கள் தொகையில் சுமார் 60 சதவீத மக்களுக்காவது கொரோனா தடுப்பூசி செலுத்தினால் தான் இன்னொரு அலை ஏற்படாது என்று கருதப்படுகிறது. அதுவும் இந்த ஆண்டு டிசம்பருக்குள் அந்த 60 சதவீத விகதத்தை எட்ட வேண்டும்.

அதை வைத்துப் பார்த்தால், இலக்கை அடைய ஒரு நாளைக்கு சுமார் 86 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியாக வேண்டும். ஆனால் கடந்த ஒரு வாரமாக நாட்டில் சுமார் 46 லட்சம் பேருக்குத் தான் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை இந்தியாவில் 35 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version