தமிழ்நாடு

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் செல்பவர்களுக்கு ஓர் அறிவிப்பு!

Published

on

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் செல்பவர்களுக்கு ஓர் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களுக்காக, அரசு பேருந்துகளில் முன்பதிவு இன்று (டிச.11) முதல் தொடங்குகிறது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கள் பண்டிகை விடுமுறை நாட்களை முன்னிட்டு, பல லட்சக்கணக்கானோர் அவர்களது சொந்த ஊர் செல்வதற்காக பேருந்து, ரயில்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தைப் பொறுத்தவரையில், 30 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவுகள் தொடங்கப்படும்.

அந்த வகையில் வரும் ஜனவரி 14 ஆம் தேதி பொங்கள் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர் செல்பவர்களுக்காக அரசு பேருந்துகளில் இன்று முதல் (டிச.11) முதல் முன்பதிவு தொடங்குகிறது. இந்தாண்டு கொரோனோ பரவல் காரணமாக குறிப்பிட்ட அளவிலான, எஞ்சிய அரசு பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன.

பயணிகளின் நலன் கருதி, சொந்த ஊர் செல்பவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கவும் போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. பொங்கல் பண்டிக்கைக்கு சொந்த ஊர் செல்ல விரும்புகிறவர்கள் அரசு பேருந்து முன்பதிவு நிலையங்களிலும், ஆன்லைன் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Trending

Exit mobile version