தமிழ்நாடு

கட்டாய தமிழ் மொழி தாளுக்கான மாதிரி வினாத்தாள் வெளியீடு!

Published

on

கட்டாய தமிழ்மொழி தாளுக்கான மாதிரி வினாத்தாள் மற்றும் பாடத்திட்டம் சற்றுமுன் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் குரூப் 4 வரையிலான தேர்வு எழுதுபவர்கள் கட்டாயம் தமிழ்மொழித்தாள் எழுத வேண்டும் என்றும் அதில் தேர்வு பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றில் விண்ணப்பதாரர்கள் செல்ல முடியும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக தமிழகத்தில் தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே பணி கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கட்டாய தமிழ்மொழி தாளுக்கான பாடத்திட்டம் மற்றும் வினாத்தாள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 1 முதல் குரூப் 4 பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாளை விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு தரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் தேர்வுக்கு தயாராகும் விண்ணப்பதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version